Friday, August 7, 2009

திரு இந்தளூர்

வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகிய திரு இந்தளூர் பஞ்சரங்கங்களில் ஒன்றாகும். பஞ்சரங்கங்கள் என்று பிரபலமாகியுள்ள ஐந்து அரங்கங்கள் வருமாறு:-

1. ஆதி ரங்கம் எனும் ஸ்ரீ ரங்க பட்டினம் (மைசூர் அருகே உள்ளது)
2. அப்பால ரங்கம் எனும் திருப்பேர் நகர் (கொள்ளிடம் அருகே உள்ளது)
3. மத்திய ரங்கம் எனும் ஸ்ரீரங்கம் (திருச்சி அருகே உள்ளது)
4. சதுர்தரங்கம் எனும் கும்பகோணம் அல்லது திருக் குடந்தை
5. அந்திம அல்லது பஞ்சரங்கம் எனும் திரு இந்தளூர் (மாயவரம் அருகே உள்ளது)

மேற்கூறிய ஸ்தலங்கள் அனைத்தும் காவிரியின் முகத்துவராதிலிருந்து சங்கமம் வரையுள்ள பாதையிலேயே அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கோயிலில் பெருமாள் பரிமள ரங்கநாதன் எனும் நாமத்தோடு பக்தர்களுக்கு அருளி செய்கிறார். பரிமள ரங்கநாயகி, புண்டரீகவல்லி ஆகிய நாமங்களில் தாயார் காட்சி தரும் இக்கோயிலில் மருவினியமைந்தன் எனவும் பெருமாளை பக்தர்கள் அழைக்கின்றனர். தாயாரை சந்திர சாப விமோசன வல்லி எனவும் பக்தர்கள் அழைக்கின்றனர்.

இக்கோயிலின் விமானத்தை வேத சக்ர விமானம் என்று அழைக்கின்றனர். கோயில் புஷ்கரிணி இந்து புஷ்கரிணி என அழைக்கப்படுகிறது. பக்தர்களுக்கு கிடந்த திருக்கோலத்தை தரிசனம் தரும் வீர சயனதிலுள்ள பெருமாள் கிழக்கு முகம் நோக்கி சந்திரனுக்கு பிரத்தியக்ஷம் தருகிறார்.

No comments:

Post a Comment