Sunday, July 19, 2009

வைணவ திவ்ய தேசங்கள்

நூற்றியெட்டு வைணவ திவ்ய தேசங்களில் சோழ நாட்டில் மட்டும் நாற்பது உள்ளன. அவற்றில் முப்பத்தி நான்கு திவ்ய தேசங்கள் தரிசன விபரங்கள் வருமாறு:

முதல் நாள்
1. ஒப்பிலியப்பன் கோயில் ஒப்பிலியப்பன், ஸ்ரீநிவாசன், பூமிதேவி - மர்க்கண்டேயக் க்ஷேத்திரம் (திருவிண்ணகரி)
2. திருக்குடந்தை சாரங்கபாணி, ஆராவமுதன், கோமளவல்லி, படிதண்டாபத்தினி (பாஸ்கர க்ஷேத்திரம்)
3. திரு ஆதனூர் ஆண்டாளுக்குமையன், ரங்கநாதர், ரங்கநாயகி, கமலவாஸனி
4. திருப்புள்ளபூதங்குடி வில்வராமன், பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி
5. திருக்கவித்தலம் கஜேந்திரவரதன், ஆதிமூலம், ரமாமணிவல்லி (கிருஷ்ணாரண்யக் க்ஷேத்திரம்)
6. திருக்கூடலூர் ஜகத்ரக்ஷகன், பத்மாஸனி, புஷ்பவல்லி, ஆடுதுறை பெருமாள் கோவில் (ஸங்கமக் க்ஷேத்திரம்)
7. திருக்கண்டியூர் ஹரசாபவிமோச்சனப் பெருமாள்,கமலநாதன், கமலவல்லி (திரிமூர்த்தி க்ஷேத்திரம்)
8. தஞ்சைமாமணிக்கோயில் 1. நீலமேக பெருமாள்,செங்கமலவல்லி (தஞ்சை மாமணிகோயில்); 2. மணிகுன்றப்பெருமாள், அம்புஜவல்லி (மணிகுன்றம்); 3. நரசிம்மன், தஞ்சை நாயகி (தஞ்சையாளி நகர்)
9. திருவள்ளியங்குடி கோலவில்லிராமன், க்ஷீராப்திநாதன், மரகதவல்லி
10. நாச்சியார்கோயில் ஸ்ரீனிவாசன், நறையூர் நம்பி, வஞ்சுளவல்லி (திருநறையூர்)
11. திருச்சேறை ஸாரநாதன், மாமதலைப்பிறான், ஸாரநாயகி, பஞ்சலக்ஷ்மி (பஞ்சஸாரக் க்ஷேத்திரம்)
12. நாதன்கோவில் ஜகந்நாதன், நாதநாதன், செண்பகவல்லி, நந்திபுர விண்ணகரம் (தக்ஷிணஜகந்நாதம்)

இரண்டாம் நாள்
13. திருக்கண்ணமங்கை பக்தவத்சலம், பத்தராவிப் பெருமாள், அபிஷேகவல்லி (கிருஷ்ணமங்களக் க்ஷேத்திரம்)
14. திருக்கண்ணங்குடி லோகநாதன், தாமோதர நாராயணன், லோகநாயகி, அரவிந்தவல்லி (கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரம்)
15. திருநாகை நீலமேகப் பெருமாள், சௌந்தர்யராஜன், சௌந்தர்யவல்லி, கஜலக்ஷ்மி
16. திருக்கண்ணப்புரம் சௌரிராஜப் பெருமாள், நீலமேகப் பெருமாள் கண்ணபுரநாயகி, பத்மினி (சப்தபுண்ணியக் க்ஷேத்திரம்)
17. திருச்சிறுபுலியூர் அருள்மாக்கடல், கிருபாஸமுத்திரப் பெருமாள், திருமாமகள், தயாநாயகி
18. திருஇந்தளூர் பரிமளரங்கநாதன், மருவினியமைந்தன், பரிமளரங்கநாயகி, புண்டரீகவல்லி
19. திருவழுந்தூர் தேவாதிராஜன், ஆமருவியப்பன், செங்கமலவல்லி

மூன்றாம் நாள்
20. திருவெள்ளக்குளம் ஸ்ரீநிவாசன், அண்ணன் பெருமாள், அலர்மேல்மங்கை, பூவார்த்திருமகள் (அண்ணன் கோவில்)
21. திருநாங்கூர் நாராயணன், அளத்தர்க்கரியான், புண்டரீகவல்லி (திருமணிமாடக் கோயில்)
22. திருநாங்கூர் புருஷோத்தமன், புருஷோத்தம நாயகி (திருவண்புருடோத்தமம்)
23. திருநாங்கூர் வைகுந்தநாதன், தாமரைக்கண்ணுடைய பிரான், வைகுந்தவல்லி (திருவைகுந்தவிண்ணகரம்)
24. திருநாங்கூர் பேரருளாளன், ஹேமரங்கர், அல்லி மாமலர் (திருசெம்பொன்செய்கோயில்)
25. திருநாங்கூர் பள்ளிகொண்ட பெருமாள், செங்கண்மால், செங்கமலவல்லி (திருத் தெற்றியம்பலம்)
26. திருநாங்கூர் குடமாடகூத்தன், சதுர்புஜகோபாலன், அம்ருதகடவல்லி (திரு அரிமேய விண்ணகரம்)
27. திருநாங்கூர் வரதராஜப் பெருமாள், மணிக்கூடநாயகன், திருமாமகள், பூதேவி (திருமணிக் கூடம்)
28. திருதேவனார்த்தொகை தெய்வநாயகன், மாதவப் பெருமாள், கடல்மகள், மாதவநாயகி (கீழச்சாலை)
29. 1. திருவாலி லக்ஷ்மி நரசிம்மர், வயலாளி மணவாளன், அமிருதவல்லி
29. 2. திருநகரி தேவராஜன், கல்யாணரங்கநாதன், திருமங்கையாழ்வார், அமிருதவல்லி
30. திருக்காவளம்பாடி கோபாலகிருஷ்ணன், மடவரல்மங்கை, செங்கமல நாச்சியார்
31. திருபார்த்தன்பள்ளி தாமரையாள்கேள்வன், பார்த்தசாரதி, தாமரைநாயகி
32. திருத்தலைச்சங்கநாண்மதியம் நாண்மதியப் பெருமாள், வியோமஜோதிப்பிரான், தலைச்சங்க நாச்சியார், செங்கமலவல்லி
33. திருச்சித்ரக்கூடம் கோவிந்தராஜன், தேவாதிதேவன், புண்டரீகவல்லி (சிதம்பரம்)
34. திருக்காழிச்சீராம விண்ணகரம் திரிவிக்ரமன், தாடாளன், லோகநாயகி, மட்டவிழ்குழலி (சீர்காழி)

1 comment: