Sunday, July 19, 2009

கும்பகோணம் வாடகை கார் சேவை

குடும்ப நண்பர் திரு ராஜா என்பவரால் பரிந்துரை செய்யப்பட்டவாடகை கார் ஓட்டுனர் தான் திரு குணசேகரன். சென்னையில் LIC முகவராக பணியாற்றிவரும் திரு ராஜா தனக்கு கிடைத்த உன்னதமான சேவையின் அடிப்படையில் தான் குணசேகரனை பரிந்துரை செய்தார். அது எவ்வளவு உண்மை என்பதை நாங்களும் அனுபவபூர்வமாக உணர்ந்ததால் தான் இந்த தாளில் குணசேகரனை பற்றி எழுதுகிறேன்.

"திருவண்ணகரத்தான் டாக்சீஸ்" என்ற பெயரில் இயங்கி வரும் நிறுவனம் திரு நாகேஸ்வரம் என்ற இடத்தில் உள்ளது. ஒப்பிலியப்பன் கோயில் அருகிலே சன்னதி தெருவில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் அருகிலே உள்ள இந்த நிறுவனத்தில் "மாருதி ஆம்னி வேன்" குணசேகரன் என்றால் தெரியாதவர்கள் இல்லை. இவரது தொலைபேசி எண் 0435 2463139 (வீடு) மற்றும் 94435 25180 (செல்) ஆகும்.

திரு குணசேகரன் ஸ்தல வழிபாட்டுக்காக வரும் பக்தர்களின் வசதிக்கும் அவரவர் செலவிடக்கூடிய நாட்களின் எண்ணிக்கைக்கும் ஏற்ப தயார் படுத்தி வைத்திருக்கும் க்ஷேத்திராடன திட்டங்களின் விவரங்கள் அடுத்தடுத்து வரும் தாள்களில் தரப்பட்டிருக்கின்றன.

No comments:

Post a Comment