Wednesday, August 12, 2009

திருவாலி

லக்ஷ்மி நரசிம்மர், வயலாளி மணவாளன் ஆகிய நாமங்களில் பெருமாளும் அமிருதவல்லியாக தாயாரும் பக்தர்களுக்கு காட்சி தரும் இத்திருக்கோயில் வைணவ 108 திவ்ய தேசங்களில் ஒன்று ஆகும்.

"திருவாழி" என்றிருந்த நாமம் மருவி திருவாலி என பிரபலமாகியுள்ள இந்த திருத்தலம் தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ளது. திருவாலி மற்றும் திருநகரி ஆகிய இரு ஸ்தலங்களும் ஒன்றுக் கொன்று கிட்டத்தட்ட 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. இவ்விரு ஸ்தலங்களும் திருமங்கை ஆழ்வாரின் சரித்திரத்தோடு பின்னிப் பிணைந்துள்ளன.

வட இந்தியாவிலுள்ளது போல விக்கிரகத்தை தொட்டு பூஜை செய்யும் வழக்கம் தென்னிந்தியாவில் இந்த கோயிலில் தான் துவங்கியது என கருதப்படுகிறது. இது தவிர இரு பெரும் மன்னர்களின் மங்கள சாசனம் உடைய ஒரே கோயில் என்ற பெருமையும் இந்த கோயிலுக்கு உண்டு. சோழ நாட்டின் திருமங்கை ஆழ்வார் மற்றும் சேர நாட்டின் குலசேகர ஆழ்வார் ஆகியோர் தான் இம்மன்னர்கள்.

மூலவர் லக்ஷ்மி நரசிம்மர் கிழக்கு நோக்கி இருந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இலாக்ஷனி புஷ்கரிணி என்ற தீர்த்தமும் உள்ளது. விமானத்தின் பெயர் அஷ்டாக்ஷர விமானம்.

No comments:

Post a Comment