சூரியனார் கோயிலுக்கு வடகிழக்கே சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில்லுள்ளது கஞ்சனூர் எனும் திருத்தலம். தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள கல்லணை-பூம்புதார் சாலையில் உள்ள இந்த சைவ ஸ்தலத்தில் ஸ்ரீ அக்னீஸ்வரர் என்ற பெயரில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு துணையாக கற்பகாம்பாள் என்ற பெயரில் தாயாரும் வீற்றிருக்கிறார். இக்கோயிலின் சிறப்பு என்னவெனில் அக்னீஸ்வரராக வீற்றிருக்கும் சிவபெருமானை தான் செல்வம் மற்றும் சகல ஐஸ்வர்யங்களையும் பக்தர்களுக்கு வழங்கும் நவக்கிரகங்களிலொருவரான சுக்கிர பகவானாக பக்தர்கள் வழிபடுகின்றனர். எப்படி காளஹஸ்த்தியில் சிவபெருமானை இராகு மற்றும் கேது கிரகங்களாக கருதி வழிபடுகின்றனரோ, எப்படி மதுரையில் வீற்றிருக்கும் ஸோமசுந்தரேசுவரரை புத பகவானாக கருதி வழிபடுகின்றனரோ, அப்படியே இங்கும் அக்னீசுவரரை சுக்கிர பகவானாக வழிபடுகின்றனர். ஆக, இது ஒரு நவக்கிரக ச்தலமாகவே கருதப்படுகிறது.இங்குள்ள இரு தீர்த்தங்களில் ஒன்று அக்னி தீர்த்தம் என்றும் மற்றொன்று பராசர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றன. அப்பரால் பாடப்பட்ட இந்த பழம் பெரும் கோயில் சாலையோரமாகவே உள்ளது. ஐந்து கட்டுக்களையுடையது இக்கோயிலின் கோபுரம்.
சுக்கிர பகவானுக்குரிய தானியம், வாகனம் முதலிய தகவல் கீழே தரப்பட்டுள்ளன.
நிறம்: வெள்ளை
தானியம்: மொச்சை
வாகனம்: கருடன்
மலர்: வெண்தாமரை
உலோகம்: வெள்ளி
கிழமை: வெள்ளி
இரத்தினம்: வைரம்
பலன்கள்: விவாக பிராப்தம், சௌபாக்கியம், மலட்டுத்தன்மை நீங்குதல்
பிரம்மாவின் மானசீக புத்திரராக கருதப்படும் பிருகு முனிவருக்கு பிறந்தவர் தான் சுக்கிர பகவான். இவர் காசிக்கு சென்று அங்கு ஒரு சிவலிங்கத்தை படைத்தது, நீண்டகாலம் தியானம் செய்ததன் விளைவாக சிவ பெருமானின் அருளால் அமிருத சஞ்சீவினி மந்திரத்தை கற்று இறந்தவரை உயிர்பிக்க செய்தமையால் அசுரர்களால் குருவாக போற்றப்பட்டார். சுக்கிரரின் பக்தியால் நெகிழ்ந்த சிவபெருமான் இவரை நவக்கிரகங்களில் ஒருவராக செய்தார்.
சுக்கிர பகவானின் கவச மந்திரம்:-
மிருணாலகுந்தேந்துபயோஜஸுப்ரபம் பீதாம்பரம் பிரஸ்ருதமக்ஷமாலினம்
ஸமஸ்தசாஸ்திரார்த்தவிதிம் மஹாந்தம் தியாயேத்கவிம் வாச்சிதமர்த்தஸித்தயே
ஓம் சிரோ மே பார்கவஃ பாது பாலம் பாது கிரஹாதிபஃ
நேத்ரே தைத்யகுருஃ பாது ஸ்ரோத்ரே மே சந்தனத்யுதிஃ
பாது மே நாஸிகாம் காவ்யோ வதனம் தைத்யவந்திதஃ
வசனம் சோசனாஃ பாது கண்டம் ஸ்ரீகண்டபக்திமான்
புஜௌ தேஜோநிதிஃ பாது குக்ஷிம் பாது மனோவ்ரஜஃ
நாபிம் பிருகுசுதஃ பாது மத்யம் பாது மஹீப்ரியஃ
கடிம் மே பாது விச்வாத்மா ஊரூ மே ஸுரபூஜிதஃ
ஜானும் ஜாட்யஹரஃ பாது ஜங்கே ஞானவதாம் வரஃ
குலஃபௌ குணநிதிஃ பாது பாது பாதௌ வராம்பரஃ
ஸர்வாண்யங்கானி மே பாது ஸ்வர்ணமாலாபரிக்ருதஃ
ய இதம் கவசம் திவ்யம் படதி சிரத்தயான்விதஃ
ந தஸ்ய ஜாயதே பீடா பார்க்கவஸ்ய பிரஸாததஃ
இதி ஸ்ரீ பிரம்மண்டபுராணே சுக்கிரகவசம் சம்பூர்ணம்

No comments:
Post a Comment