Friday, July 24, 2009

திருமங்கலக்குடி

திருமாங்கலக்குடி அனைத்துமே திருத்தலம் சூரியனார் கோயிலுக்கு வெகு அருகே உள்ளது. இங்கு தரிசனம் செய்த பிறகு தான் சூரியனார் கோயிலுக்கு செல்லவேண்டும் என்ற ஐதீகம் உள்ளது.

இதன் படி முதன்முதலில் இத்திருக்கோயிலுக்கு சென்றோம். சிவபெருமான் சுயம்பூவாக, பிராணநாதேசுவரராக வீற்றிருக்கும் இக்கோயிலில், தாயார் மங்களாம்பிகை எனும் பெயரில் வீற்றிருக்கிறார். ஷண்முகனாக முருகனும் வீற்றிருக்கிறார்.

இராகு, கேது மற்றும் சனி கிரஹதோஷத்தால் திருமணம் தாமதித்து ரும் இளம் பெண்கள் தொடர்ந்து ஐந்து நாட்கள் மங்கலாம்பிகையை தியானம் செய்து வந்தால் திருமண பாக்கியத்தை அடைந்திடுவர். இக்கோயிலில் திருமாங்கல்யம் மற்றும் புடவை ஆகியவற்றை தாயாருக்கும் ஈசுவரனுக்கு வஸ்திரத்தையும் காணிக்கையாக்குகின்றனர்.

திருமங்கலக்குடி பஞ்சமங்கலக் க்ஷேத்திரமாக கருதப்படுகிறது. ஸ்தலப் பெயர் மங்கலக்குடி, தாயாரின் பெயர் மங்களாம்பிகை, கோபுரம் மங்கள விமானம், புஷ்கரிணி மங்கள தீர்த்தம் மற்றும் வீற்றிருக்கும் மங்கள விநாயகர் என்று அனைத்திலும் மங்களகரமாக விளங்கும் புண்ணிய ஸ்தலம் இது.

இக்கோயிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு அருகேயுள்ள சூரியனார் கோயிலுக்கு விரைந்தோம்.



No comments:

Post a Comment