Monday, August 31, 2009

கீழ்பெரும்பள்ளம்

ஸ்ரீ நாகநாதராக சிவபெருமானும் சௌந்தர நாயகியாக தாயாரும் எழுந்தருளி செய்த திருத்தலமாகிய கீழ்பெரும்பள்ளம் ஒரு நவக்கிரக ஸ்தலமுமாகும். கேது பகவான் அருள் செய்யும் புண்ணிய ஸ்தலம் தான் கீழ்பெரும்பள்ளம்.

வாணகிரி என்ற பெயரிலும் அறியப்படும் இந்த ஊர் திருவெண்காடிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. இங்கு நாகநாத சுவாமியை வழிபட்ட கேது பகவான் பாவங்களிலிருந்து விடுபட்டதாக கூறப்படுகிறது. தலையுடன் கூடிய கேது பகவானை தரிசிப்பதென்பது மிகவும் அரிது. அப்பேர்ப்பட்ட கேது பகவானை இங்கு காணலாம்.

புராணங்களின் படி மகா விஷ்ணுவால் இரு துண்டங்கலாக்கப்பட்ட உடம்பின் பகுதி கேதுவாகவும் தலைப் பகுதி இராகுவாகவும் விளங்குவதாக அறிகிறோம். அமுதுண்ட காரணத்தால் பாம்பின் தலையுடன் கூடிய இராகு பகவானும் அறுபட்ட உடல் பொதிகை மலையில் விழுந்ததாகவும் இத்தனை கண்டெடுத்த ஒரு பிராமணன் இதனை பாதுகாத்து வந்ததாகவும் பிற்காலத்தில் அமுதுண்ட காரணத்தால் ஒரு பாம்பின் தலை அசுர உடம்புடன் ஒட்டி கேது பகவானாக ஆனதாகவும் கூறப்படுகிறது.

கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திருட்டு பயம், கெட்ட பழக்கங்கள், சொத்து சேதம் அடைதல் அல்லது நாசமடைதல், மானமிழத்தல் மற்றும் புத்திர தோஷம் போன்றவற்றால் அல்லல் படுவர். இங்கு வந்து கேது பகவானை தரிசிக்கும் பக்தர்கள் தோஷங்களிலிருந்து முக்தி அடைவர் என நம்பப்படுகிறது.
கேது பகவானுக்கு உரிய நிறம், உலோகம், தானியம் போன்றவை வருமாறு:-

நிறம்: பல்வேறு நிறங்கள் (பூ போட்டது போல்)
தானியம்: கொள்ளு
வாகனம்: சிங்கம்
மலர்: செவ்வல்லி
உலோகம்: கருங்கல்
கிழமை: ஞாயிறு
இரத்தினம்: வைடூர்யம்
பலன்கள்: தரித்திரம், வியாதிகள் மற்றும் பீடைகளில்ருந்து நிவர்த்தி

கேது கவசம் என்ற மந்திரம்:-

கேதும் கராலவதனம் சித்ரவர்ணம் கிரீடினம்
ப்ரணமாமி சதா கேதும் த்வஜாகாரம் க்ரஹேச்வரம்
சிதரவர்ண சிரப்பாது பாலம் தூம்ரசமத்யுதி
பாதுநேத்ரே பிங்கலாக்ஷ ஸ்ருதீ மே ரக்தலோச்சன
க்ராணம் பாது ஸுவர்ணாபஸ்சிபுகம் ஸிம்ஹிகாஸுத
பாது கண்டம் ச மே கேது ஸ்கந்தௌ பாது க்ரஹாதிப
ஹஸ்தௌ பாது சுரஸ்ரேஷ்ட குக்ஷிம் பாது மஹா க்ரஹ
ஸிம்ஹாஸன கடிம் பாது மத்யம் பாது மஹாஸுர
ஊரூ பாது மஹாசீர்ஷோ ஜானுனி மேதிகோபன
பாது பாதௌ ச மே க்ரூர சர்வாங்கம் நர பிங்கள
ய இதம் கவசம் திவ்யம் சர்வரோக விநாசனம்
சர்வசத்ரு விநாசம் ச தாரணாத்விஜயீ பவேத்
இதி ஸ்ரீ பிரஹ்மாண்டபுராணே கேது கவசம் சம்பூர்ணம்

Monday, August 17, 2009

திருவெண்காடு

ஸ்ரீ சுவேதாரண்யேசுவரர் என்ற நாமத்தில் சிவபெருமானும், பிரம்ம வித்யாம்பாள் என்ற நாமத்தில் தாயாரும் எழுந்தருளியிருக்கும் இத்திருக்கோயிலில் நவக்கிரகங்களில் ஒருவரான புதன் கோயில் கொண்டிருக்கிறார்.

அப்பர், சம்பந்தர் மற்றும் சுந்தரரால் பாடப்பெற்ற இத்திருக்கோயில் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் பாதையில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காவிரிக் கரையோரமாக அமைந்திருக்கும் ஆறு பெரும் சிவஸ்தலங்களில் திருவெண்காடும் ஒன்று ஆகும். மற்றவை வருமாறு, திருவையாறு, சாயாவனம், மயிலாடுதுறை, திருவிடை மருதூர் மற்றும் திருவஞ்சியம் ஆகியவை ஆகும். இக்கோயிலில் வீற்றிருக்கும் சிவபெருமானை தேவேந்திரன், ஐராவதம் என்ற இந்திரனின் வாகனம், சூரிய-சந்திர-புதன் ஆகிய நவக்கிரகங்களும் வந்து வணங்கியதாக கூறப்படுகிறது. ஆதி சிதம்பரம் என்ற நாமத்திலும் அறியப்படும் இந்த கோயிலில் ஹஸ்தி நடனம் ஆடும் நடராஜரையும் காணலாம். ஞாயிற்றுக் கிழமை இரவுகளில் அகோரமூர்த்தி வடிவத்தில் உள்ள சிவபெருமானை பக்தர்கள் வணங்குகிறார்கள். சூரிய தீர்த்தம் மற்றும் சோம தீர்த்தம் ஆகிய புண்ணிய தீர்த்தங்களும் இக்கோயிலில் பிரபலமாகும். ஸ்தல விருட்ஷமாக வில்வம் மற்றும் கொன்றை ஆகியவை விளங்குகின்றன.

இக்கோயிலை ஒட்டி புதையல் எடுக்கப்பட்ட வெண்கல சிலைகள் சென்னை அரசு பொருட்காட்சியகத்தில் உள்ளன. இவை அர்த்த நாரீசுவரர் மற்றும் சண்டேசுவரர் ஆகியோரின் சிலைகளாகும். மற்றும் சில புதையல் சிலைகள் தஞ்சையில் உள்ள கலைப் பொருள் காட்சியகத்தில் உள்ளன.

புத பகவானுக்கு உரிய நிறம், உலோகம், தானியம் போன்றவை வருமாறு:-


நிறம்:
பச்சை
தானியம்: பச்சை பயிறு
வாகனம்: குதிரை
மலர்: வெண் காந்தல்
உலோகம்: பித்தளை
கிழமை: புதன்
இரத்தினம்: மரகதம்
பலன்கள்: சகல சாஸ்திரம் மற்றும் ஞானம்

புத கவசம் என்ற மந்திரம்:-

அஸ்ய ஸ்ரீ புத கவச ஸ்தோத்ர மந்த்ரஸ்ய
கச்யப ருஷிஃ
அனுஷ்டுப் சந்தஃ
புதோ தேவதா
புத ப்ரீத்யர்த்தம் ஜபே விநியோகஃ
புதஸ்து புஸ்தகதரஃ கும்குமஸ்ய சமத்யுதிஃ
பீதாம்பரதரஃ பாது பீதமால்யானுலேபனஃ
கடிம் ச பாதுமே சௌம்யஃ சிரோதேசம் புதச்ததா
நேத்ரே ஞானமயஃ பாது ஸ்ரோத்ரே பாது நிசாப்ரியஃ
க்ராணம் கந்தபிரியஃ பாது ஜிஹ்வா வித்யாப்ரதோ மம
கண்டம் பாது விதோஃ புத்ரோ புஜௌ புஸ்தகபூஷணஃ
வக்ஷஃ பாது வராங்கஸ்ச ஹ்ருதயம் ரோஹிணீஸுதஃ
நாபிம் பாது சுராராத்யோ மத்யம் பாது ககேச்வரஃ
ஜானுனீ ரௌஹிணேயஸ்ச பாது ஜங்கேகிலப்ரதஃ
பாதௌ மே போதனஃ பாது பாது சௌம்யோகிலம் வபுஃ
ஏதத்வி கவசம் திவ்யம் சர்வபாப ப்ரணாசனம்
சர்வரோகப்ரசமனம் சர்வதுஃக்கநிவாரணம்
ஆயுராரோக்ய சுபதம் புத்ரபௌத்ரா பிரவர்த்தனம்
யஃ படேச்ச்ருணுயாத்வாபி சர்வத்ர விஜயீ பவேத்
இதி ஸ்ரீ பிரம்ம வைவர்த்தபுராணே புத கவசம் சம்பூர்ணம்